KODA NADU :கொடநாடு கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு படுத்தக் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு.
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியன்று கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்றது. அங்கிருந்த காவலாளியும் கொல்லப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். கனகராஜ் இவரின் சகோதரர் தான் தனபால்.
இவர் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி ஒரு பேட்டியில் பேசி இருந்தார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலானது . இவ்வாறு பேசியதற்கு மறுப்பு தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்ற தொடர்ந்தார்கள்.
இந்த வழக்கு இன்று சென்னை நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தரப்பு சாட்சியத்தை பதிவு செய்ய ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகை பாலன், எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்து, அது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். விசாரணை முடிவில் எடப்பாடி பழனிசாமியை கொடநாடு வழக்குடன் தொடர்புபடுத்தி பேசக் கூடாது என்றும் அவ்வாறு பேசினால் மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே பத்து லட்சம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது .