Thiruvarur:தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அவர்களின் இயல்பு நிலை பதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்து வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து நம் தமிழக அரசு கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் விடுமுறை அளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை இருந்ததால் அங்குள்ள இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை என பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இது மட்டும் அல்லாமல் டெல்டா மாவட்டங்களில் வானம் மேக கூட்டங்களோடு இருப்பதால் மழை வரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வந்ததால் அவர்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று ஒரு நாள் மற்றும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.