CINEMA:சூர்ய வம்சம் படம் பற்றி சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்தார் இயக்குனர் விக்ரமன்.
90’ஸ் காலகட்டத்தில் தமிழ் திரையுலகை கலக்கிய நடிகர் தான் சரத்குமார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலிலும் கால் பதித்து உள்ளார். சூர்ய வம்சம் மற்றும் நாட்டாமை, போன்ற இவரின் படங்கள் மக்கள் மத்தியில் பிரபலம். இந்த நிலையில் சூர்ய வம்சம் படத்தின் இயக்குனர் விக்ரமன். அப்படத்தில் சரத்குமார் மற்றும் தேவையாணிக்கு இடையில் நடந்த சுவாரசிய நிகழ்வை பேட்டி ஒன்றில் பகிர்த்து இருக்கிறார்.
அதில் 1997 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சூர்யவம்சம் வெளியானது மக்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. அப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பார். அப்பா சரத்குமாருக்கு ஜோடியாக ராதிகாவும் . மகன் சரத்குமார்க்கு தேவயானியும் நடித்து இருப்பார்கள்.
அதில் ஒரு கட்சி சரத்குமார் தனியாக கல்யாண மண்டபத்தில் உட்கார்ந்து உணவு உண்ணும் காட்சி இடம் பெற்று இருக்கும். அந்த காட்சிக்காக உணவு மதியம் வாங்கி வரப்பட்டது, ஆனால் அந்த கட்சி இரவு தான் எடுக்கப்பட்டது இந்த நிலையில் அந்த உணவு ஏற்கனவே கேட்டு போய் இருக்கிறது ,இருப்பினும் அந்த காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக தேவாயானி சரத்குமாருக்கு பரிமாறுவார்.
அந்த உணவை ரசித்து உண்பது போல் சாப்பிடுவார் சரத் குமார். அந்த ஷாட் முடிந்த பின் வாஷ் ரூம்க்கு சென்று வாந்தி எடுத்தார் சரத்குமார். அப்போது தான் எனக்கு தெரியும் அந்த உணவு ஏற்கனவே கேட்டு போய் விட்டது என்று. என தனது நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்தார் இயக்குனர் விக்ரமன்.