கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதார் கேஒய்சி விவரங்களை இணைக்கப்படவில்லை என்றால் தங்கள் கேஸ் சிலிண்டர் ரத்து செய்யப்படும் என பொதுத்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நாட்டில் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டாலும் கேஸ் சிலிண்டர் இல்லாமல் இருக்காது. இதற்கு முக்கிய காரணம் நம் அரசே. ஏனென்றால் மக்கள் பெரும்பாலும் விறகு அடுப்பை பயன்படுத்தி கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி அனைவரும் கேஸ் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். ஏனெனில் விறகை எரிப்பதன் மூலம் அதில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு என்ற புகை நமக்கு தீங்கு விளைவிக்கும்.
மேலும் காற்று மாசுபடுகிறது. அதனால் தான் நமக்கு கண் எரிச்சல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிலையில் தற்போது அனைவரும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு மாறினார். இந்நிலையில் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டில் வைத்திருக்கும் அனைவரும் தங்களது கேஒய்சி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதில் சிலிண்டர் வாங்கும் இடத்திற்கு சென்று, அங்கு ஆதார் மற்றும் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.
அப்படி இல்லையெனில் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களின் வீட்டிற்கு சென்று செல்போன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். அப்படி நவம்பர் 30 ஆம் தேதிக்குள் கேஒய்சி விவரங்களை இணைக்கப்படவில்லை என்றால் சமையல் எரிவாயு வைத்திருபவர்கள் இணைப்பு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் கேஒய்சி பதிவு செய்யாதவர்களுக்கு பாரத் கேஸ் ஏஜென்சி சார்பில் SMS அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.