Amaran Movie: அமரன் படம் திரையிடப்படும் அரங்குகளில் போலீசார் பயங்கர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் அமைப்பினர், அமரன் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது இதற்கு முக்கிய காரணம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31 தீபாவளி அன்று திரைக்கு வந்தது தான் அமரன் திரைப்படம். இந்த படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிக சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்போது இந்த அமரன் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது.
ஏனென்றால் அந்த திரைப்படத்தில் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட கதை. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திரைப்படம் இந்து-முஸ்லிம் மதத்திருக்கு இடையே ஒற்றுமையை கலைக்கும் விதமாக அமைந்திருக்கிறது என கூறி வருகின்றனர்.
இது மட்டும் அல்லாமல் முஸ்லீம்களை அமரன் திரைப்படத்தில் தீவிரவாதிகள் போல காட்டி உள்ளார்கள் என எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் கூறி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல காட்டியுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என போரட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திரையரங்குகளில் பாதுகாப்பு காரணமாக போலீசார் போடப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.