TN Government: தமிழக அரசு அனைவருக்கும் நிரந்தர வீடு கிடைக்கும் வகையில் கலைஞர் இல்லம் என்ற திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.3.10 லட்சம் தருகிறது.
கலைஞர் கனவு இல்லம் என்பது வீடு இல்லாத குடிமக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்க தொடங்கப்பட ஒரு சமூக நல திட்டமாகும். இந்த திட்டத்தில் சுமார் 8 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு கனவு இல்லத்திற்கும் 3.10 லட்சம் வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு முக்கிய நோக்கம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் நலன் பெற வேண்டும் என்பதற்காக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும், விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும், எந்த ஒரு வீடும் இருக்க கூடாது, வறுமை கோட்டிருக்கு கீழ் இருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்திற்கு பயன் பெற செங்கல் மற்றும் சிமெண்ட்-ஆல் இருக்கும் வீடு இருக்க கூடாது.
மேலும் இந்த திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு 300 சதுர அடி பரப்பளவில் சிமெண்ட் கூரையாகவும் மற்றும் 60 சதுர அடியில் தீ பிடிக்காத கூரையாகவும் கட்டி தரப்படும். மேலும் இந்த வீடு கட்டும் போது கட்டுமான செலவை குறைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி வீடு கட்ட வேண்டும். இந்த திட்டத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் தமிழகம் முழுவதும் கட்டித்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.