VIJAY – H.VINOTH:விஜய் அவர்கள் இயக்குனர் எச் .வினோத் உடன் ஆர்மி அதிகாரிகளை சந்தித்தார்.
விஜய் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். இனி வரும் காலங்களில் திரைத்துறையை முழுமையாக விட்டுவிட்டு விலகுவதாக தெரிவித்து இருந்தார். இருப்பினும் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படங்கள் மட்டும் விரைவில் நடித்து முடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநில மாநாடு கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பல லட்சம் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் தான் கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகள் பற்றியும் தெரிவித்தார். மேலும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் எதிரியாக திமுகவை விமர்சித்து பேசினார். மேலும் தன் கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று தெரிவித்தார். இது மிகவும் விமர்சனத்துக்குரிய விவாத பொருளாக மாறியது.
விஜய் மாநாட்டிற்கு பிறகுதான் கட்சியின் செயல்பாடுகளை அதிகரித்து இருக்கிறது. மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு 26 கொள்கைகள் தீர்மானம் போன்ற கட்சி செயல்பாடுகளை நடத்தினார். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி வேலை செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு கூறி இருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன் உடன் அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொள்வார் என்ற செய்தி தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் தான் விஜய் -யின் 69 தாவது படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதனை எச் .வினோத் இயக்க இருக்கிறார். எச் .வினோத் அஜித்தின் துணிவு, வலிமை படங்களை இயக்கியவர் . இப் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் ராணுவ வீரர்களை விஜய் மற்றும் எச் .வினோத் சந்தித்து இருக்கிறார்கள்.
அரசியல் காரணமாக இருந்தால் தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இடம் பெற்று இருப்பார். இது திரைப்படத்திற்கான சந்திப்பாக இருக்கும் என்பதால் தான் எச் .வினோத் உடன் ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சந்தித்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வருகின்றன.