Salem: சேலம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் கைதிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என கூறிய போலீஸ் மற்றும் மருத்துவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் போலீசை கீழே தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் வீராணம் அருகே வெள்ளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளார்கள். இந்த வழக்கு காரணமாக 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனை செய்ய வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது பணியில் இருந்த அரசு மருத்துவர் செந்தில் குமார் நான் மட்டும் தான் பணியில் இருக்கிறேன், எனவே நீங்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறியதாக தகவல் வந்துள்ளது.
அப்போது அவர்கள் கொலை குற்றவாளிகள் என கூறி உடனே பரிசோதனை செய்யுங்கள் என இரு தரப்பினரும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளாக மாறியது. அப்போது தேவை இல்லாமல் காவல்துறையை ரொம்ப ஓவரா பேசுறீங்க.. நீங்கா வண்டிய எடுத்துட்டு கிளம்புங்க.. என செந்தில் குமார் கூறியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அப்போது போலிசார், கீழே தள்ளி விட்ட வீடியோ எங்களிடம் இருக்கிறது.
போலீஸ் என்றால் உங்களுக்கு வீட்டு வேலைகாரங்க மாறி இருக்கா, இந்த அளவுக்கு தரக்குறைவாக பேசுகிறீர்கள் என கூறியுள்ளார். ஆனால் மருத்துவர், 7 பேருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய முடியாது சற்று தாமதம் ஆகும் என கூறி பணியை தொடங்கினோம். ஆனால் அப்போது காவலர் ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என கேட்டு போனை வாங்க முயற்சித்த போது அவர் என்னை தாக்கினார். காவல்துறை பாதுகாப்பாக இல்லாமல் எங்களிடம் அராஜகம் செய்கிறது என கூறியுள்ளார்.