இனி அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!! ஸ்டாலின் அரசு அதிரடி முடிவு!!

DMK:புதிதாக குடும்ப அட்டை வாங்கும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க திமுக அரசு முடிவு.

திமுக அரசு ஆட்சி அமைத்த போது முதலமைச்சராக பத்தி ஏற்ற மு.க ஸ்டாலின் அவர்கள். ஐந்து திட்டத்தில் கையெழுத்திட்டார் . அதில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்  மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் குடும்பங்கள் பயனடைகிறார்கள். இந்த தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

இந்த உரிமைத் தொகை   ஆண்டு வருமான தகுதியின் அடிப்படை  வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதியாகாக திருமணம் ஆனவர்கள், குடும்ப அட்டை பெற்ற மகளிருக்கு  மகளிர் உரிமை தொகை வழங்க சிறப்பு திட்டம் செயல்படுத்த  உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடுகள் செய்ய  இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக இதற்கு முன்பு பதிவு செய்து இருக்கின்ற பலருக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. பல குடும்ப பெண்கள் தகுதி இருந்தும் இந்த திட்டத்தில் பயன் பெறாமல் இருக்கிறார்கள். அவர்களது விண்ணப்பத்தை மறு பரிசீலனை செய்து  உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மக்கள் வைத்து இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து  செய்தியாளர்கள் கேள்வி கேட்ட நிலையில்  அதற்கு பதிலாக குடும்ப அட்டை வைத்து இருக்கும் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்  என்றும் புதிய பயனர் இணைப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என்றார்.