குஜராத் மாநிலம், காந்திநகர் ஐஐடி.யை சேர்ந்த விஞ்ஞானிகள், குஜராத் உயிரி தொழில்நுட்பம் ஆராய்ச்சி மையம், குஜராத் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் கழிவுநீரில் கொரோனா வைரசின் மரபணு மூலக்கூறுகள் கலந்து இருப்பதை கண்டறிந்தனர்.இதனால், கழிவு நீர் மூலம் கொரோனா பெருமளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய விஞ்ஞானிகள் முதல் முறையாக இதனை கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வறிக்கையை `சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட்’ என்னும் சர்வதேச இதழில் கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளவை யாதெனில் அகமதாபாத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கடந்த மே 8, 27 ஆகிய தேதிகளில் சேகரித்த கழிவு நீரை கொண்டு ஆய்வு செய்ததில் சார்ஸ்-சிஓவி-2 வைரசின் மூலக் கூறுகளான ஓஆர்எப்ஏபி, ஓஆர்எப்ஏபி என் மற்றும் எஸ் இருப்பது கண்டறியப்பட்டதுள்ளது.
மேலும் அதிர்ச்சிக்குறிய தகவலாக கூறப்படுபவை மே 8ஆம் தேதி கண்டறியப்பட்ட வைரஸின் அடர்த்தியை விட, மே 27ம் தேதி கண்டறியப்பட்ட வைரசின் அடர்த்தி 10 மடங்காக உள்ளது. இவற்றை தொடர்புபடுத்தினால், அகமதாபாத்தில் மே 8ம் தேதியை விட, 27ம் தேதி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்ததுள்ளது என்பது உறுதியாகிறது.
ஆஸ்திரேலியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தொற்று வேகமாக அதிகரிக்க காரணம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் அதிகளவு கொரோனா வைரஸ் மூலக்கூறுகள் இருக்கின்றன.இதன் காரணமாகவேஅந்நாடுகளில் நோய் வேகமாக பரவி இருக்ககூடும் என்று இந்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.