Gold News: நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அந்த நிலையில் இன்று சென்னையில் சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறங்களுடன் காணப்பட்டு வருகிறது. அந்த நிலையில் இந்த மாதத்தில் சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
ஆனால் திடீரென நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் மீண்டும் தங்கம் விலை எகிறும் என்ற நிலையை மனதில் வைத்து பயத்தில் இருந்தார்கள். ஆனால் இன்று தங்கத்தின் விலை ஏறியபடியே குறைந்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.55,480 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,935- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஆபரணத் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.55,560 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரம் தொட்டு புதிய உச்சம் பெற்றது. இதனால் தங்கத்தின் விலை அன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. ஆனால் மக்கள் எப்போது தங்கம் விலை குறையும் என தான் எதிர்பார்த்து உள்ளார்கள்.