CSK team:ஐபிஎல் ஏலத்தில் எடுக்க முக்கிய மூன்று முக்கிய வீரர்களை முடிவு செய்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
ஐபிஎல் ஒருங்கிணைப்பு குழு வருகின்ற ஆண்டு 2025க்கான 18 வது ஐபிஎல் சீசன் போட்டிக்கான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யவும் மற்றும் ஏல தேதியை அறிவித்து இருந்தது. இந்த ஐபிஎல் ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. எனவே சிஎஸ்கே நிர்வாகம் 65 கோடி ரூபாயை செலவு செய்து ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதிச பதிரனா, ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி ஆகியோரை தக்கவைத்தது.
மேலும் இந்த அணியில் ஏலம் எடுக்க இருப்பு தொகையாக 55 கோடி வைத்து இருக்கிறது. மேலும் நவம்பர் மாதத்தின் இறுதியில் நடைபெற உள்ள ஏலத்தில் நட்சத்திர வீரர்கள் 12 பேரை இரண்டு குழுக்களாக பிரித்து ஏலமிட போவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன்படி முதல் குழுவில் பட்லர், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், காகிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க் ஆகிய வீரர்கள் இருக்கிறார்கள்.
மேலும் இரண்டாவது குழுவில் யுஜ்வேந்திர சஹல், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், கே.எல்.ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் இருக்கிறார்கள் இதில் மூன்று வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆழ்ந்துள்ளார்கள்.
மேலும் இதற்கு முன்பு ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா, சிவம் துபே, தோனி ஆகிய ஐந்து வீரர்களை சிஎஸ்கே அணி தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.