டெஸ்லா ஸ்மார்ட்போன் வெளிவந்தால் இப்போது செயல்படும் மொபைல் துறையை மாற்றும் என பலர் கூறுகிறார்கள். டெஸ்லா ஸ்மார்ட்போன் என்பது மின்சார நிறுவனமான டெஸ்லாவால் உருவாக்க கூடிய ஒரு வகையான ஸ்மார்ட்போன். இந்த போன் பற்றிய எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் அந்த நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்த ஸ்மார்ட் போன் டெஸ்லா காருடன் இணைந்து வேலை செய்வது மற்றும் உங்கள் எண்ணங்களால் கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஜார்ஜ் தேவையில்லை, செயற்கை கோளுடன் இணைந்து செயல்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த போன் பயன்படுத்த இன்டர்நெட் தேவையில்லை என கூறுகிறார்கள். ஆனால் டெஸ்லா நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிக்க எந்த ஒரு விதமான தொழிலும் எங்களிடம் இல்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தது.
ஆனால் இப்போது வரப்போகிறது என்ற விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த போன் நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் செயல்படும் என தகவல் வெளியாகி உள்ளன. ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என கூறப்படுகிறது. இந்த டெஸ்லா நிறுவனம் மிக சிறப்பாக சோலார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதால் டெஸ்லா ஸ்மார்ட்போன் தயாரிக்கும் என பலராலும் எதிர்பார்க்கபடுகிறது. இந்த டெஸ்லா ஸ்மார்ட்போன் விலை சுமார் 100 டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா ஸ்மார்ட்போன்கள் உலகில் புது வித மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறி வருகிறார்கள்.