Actor Simbu:நடிகர் சிம்பு காதல் தோல்வி பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் மற்றும் இணையத்தை ஆக்கிரமித்த இருக்கும் செய்தி என்றால் அது நடிகை நயன்தாரா ஆவணப்படம் குறித்து நடிகர் தனுஷ் 10 கோடி கேட்ட விவகாரம் தான். நடிகை நயன்தாரா தன் பிறந்த நாள் அன்று OTT தளத்தில் தனது வாழ்க்கை குறித்த ஆவணப்படம் வெளியீட்டு இருந்தார். அந்த படத்தில் அவர் தன் சினிமாவுக்கு வந்தது முதல் காதல் தேல்வி, திருமணம் என பல வற்றை பற்றி பேசி இருப்பார்.
இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் நடிகர் சிம்பு தனது காதல் தோல்வி குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்களால் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. அதாவது அந்த வீடியோவில் தொகுப்பாளினி ஒருவர் சிம்புவிடம் அவரது காதல் பற்றி கேள்வி எழுப்ப அதற்கு அவர் பதில் கூறி இருப்பார்.
அதில் சிம்பு நான் காதலித்து ஏமாறவில்லை என்னை காதலித்தவர்கள் ஏமாற்றினார்கள் என்றும் நான் காதலிப்பவர்கள் என்னை ஏமாற்றுவார்கள் என்று தெரிந்தே நான் காதலித்து இருந்தே என்று கூறி இருந்தார். எனக்கு அப்போது காதல் தேவைப்பட்டது. அதனால் நான் அவர்களை காதலித்து வந்தேன் நான் காதலித்ததால் அவர்கள் என்னை ஏமாற்றினார்கள்.
அவர்கள் என்னை ஏமாற்றியதால் தான் என்னை சரி செய்து கொள்ள முடிந்தது. அந்த காதல் தோல்வி வலி தான் என்னை மொல்டாக்கியது. என கூறியிருந்தார்.