BJP: W.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நவம்பர்-23 நடைபெற்று வருகிறது. மகாயுதி என்ற பெயரில் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி மற்றும் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 215 இடங்களில் மகாயுதி முன்னிலை வகிக்கிறது.
ஆட்சி அமைக்க 144 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பொது என்ற நிலையில் அதற்கு அதிகமாக இடங்களை கைப்பற்றி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது பாஜக மகாயுதி கூட்டணி.மேலும் காங்கிரஸ் மகா விகாஸ் அகாடி அணி 51 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது எனக் கூறலாம்.
இதனால் பாஜக முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்.