West Bengal:பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்வி செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்காள மாநிலத்தில் நவம்பர் 18 அன்று இரவு கர்ப்பிணிப் பெண் ஒரவர் பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த பெண் மருத்துவ சிகிச்சைக்காக பாங்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த அவர். இந்த நிலையில் அந்த கர்ப்பிணி பெண் மருத்துவ மனையில் உள்ள கழிவறைக்கு சென்று இருக்கிறார்.
அங்கு அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு மயங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து சுற்றித் திரிந்த நாய் ஒன்று குழந்தையை கல்விச் சென்று இருக்கிறது. மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணுக்கு அது தெரியவில்லை. அந்த பெண்ணின் உறவினர்கள் கழிவறைக்கு சென்ற பெண் நீண்ட நேரம் வரவில்லை என்பதால் கழிவறைக்கு சென்ற வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
மேலும் பிறந்த குழந்தையை தேடி பார்த்து இருக்கிறார்கள். அப்போது மருத்துவமனை கேமராவில் குழந்தை நாய் ஒன்று கவ்வி சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மேலும் அந்த பெண்ணை மேல் மருத்துவ சிகிச்சைக்காக பிஷ்ணுபூர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவமனையில் முறையான பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம் என பொது மக்கள் அரசின் மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.