Gold price:கடந்த வாரம் ஏற்றத்தில் இருந்த இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்களது வருமானத்தை தங்கத்தில் சேமிக்கும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. பின் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஒரு தங்கம் சவரன் ரூ 59,000 ஆக உச்ச பெற்றது.
அதன் பின் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. இதற்கு சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை சற்று குறையத் தொடங்கியது. தங்கம் வாங்க இது சரியான நேரம் என பொருளாதார வல்லுநர்கள் சொல்லப்பட்டது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 விலை உயர்ந்தது.
அதாவது 3000 ரூபாய் வரை விலை உயர்ந்தது. தங்கம் ஒரு சவரன் ரூ.58400க்கு வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 800 ரூபாய் குறைந்து உள்ளது. இதனால் ரூ 57,600 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ7,200யாக உள்ளது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் வெள்ளியின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 101 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை சற்று குறைந்து இருக்கிறது.