vck-dmk: 2025 தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி வைக்கும் சூழல் நிலவி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக கூட்டணி தனித்த பெரும்பான்மையான வாக்குகள் பெற்று தமிழகத்தில் வலுவான கூட்டணியாக இருக்கிறது.இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் தவெக கட்சியை இந்த வருடம் ஆரம்பித்து, முதல் மாநில மாநாடு நடத்தி இருக்கிறார். மேலும் விஜய் திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்து இருக்கிறார்.
மேலும் கூட்டணி கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கட்சி கொள்கையை அறிவித்து இருந்தார். இது தான் திமுக கூட்டணி கட்சிகள் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. திமுக கூட்டணியில் பலம் பொருந்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது கூட்டணி குறித்து முடிவுகளை மாறி உள்ளது. விசிக கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கொள்கையை ஆதரிப்பதாக தெரியவருகிறது.
சமீபத்தில் விசிக மாநில துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பாமக அதிமுக, பாஜக என மாறி மாறி கூட்டணி வைத்து வருகிறது. ஆனால் திமுகவுடன் எதிர்ப்பு போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில் தான் வருகின்ற நவம்பர்-29 ஆம் தேதி நடக்க உள்ள அரசு விழாவில் 21 சமூக நீதிப் போராளி மணிமண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் திறக்கப்பட உள்ளது.
அதற்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து இருப்பது அனைவராலும் உற்று நோக்கும் வகையில் உள்ளது. விசிக கூட்டணி தொடர்பாக தனது நிலைப்பாட்டை மற்றும் நிலையில் பாமக திமுகவுடன் கூட்டணி வைக்கும் சூழல் நிலவி வருகிறது.