Aadhaar card:ஆதார் அட்டை புதுப்பித்து கொள்ள கால அவகாசத்தை அதிகரித்து இருக்கிறது UIDAI.
இந்தியாவில் ஒரு நபரின் அடையாளமாக ஆதார் அட்டை உள்ளது. ஆதார் அட்டையில் அதற்கு சொந்தமான நபரின் முகவரி, தாய் தந்தை பெயர்கள் மற்றும் புகைப்படம், கைரேகை முதலிய விவரங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த ஆதார் அட்டையை கொண்டு நபர் ஒருவர் பள்ளியில் சேருவது முதல் இறப்பு சான்றிதழ் பெறுவது வரை கட்டாயம் ஆதார் அட்டை தேவைப்படுகிறது.
மேலும் இந்த ஆதார் அட்டை பாஸ்போர்ட் கார்டு வாங்குவதற்கு மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் அட்டைகளை பலர் புதுப்பிக்காமல் இருந்து வருகிறார்கள். அதாவது பத்து வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஆதார் அட்டையை வைத்து இருக்கிறார்கள். இந்த ஆதார் அட்டை அரசு வழக்கு அனைத்திலும் இணைக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக வங்கி பான் கார்டுடன் இணைக்க அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 10 வருடங்களுக்கு மேலாக ஆதார் கார்டு வைத்து இருப்பவர்கள் ஆதார் கார்டில் தங்களின் புதிய விவரங்களை அப்டேட் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதற்கான கடைசி தேதியாக டிசம்பர் 14ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. மேலும் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களில் பிழை இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. ஆதார் அட்டையை புதுப்பித்தல் மூலம் அரசு வழங்கும் அனைத்து திட்டங்களையும் மிக எளிதில் பெற முடியும்.