Russia Ukraine War:ரஷ்ய ராணுவத்துடன் சேர்ந்து உக்ரைன் மீது போர் புரிய வந்த 15000 ஆயிரம் வடகொரியா ராணுவ வீரர்களால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
நேட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணைந்து விடக்கூடாது என்பதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் புரிந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான குழந்தை, அப்பாவி பொது மக்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள். இரு நாட்டு எல்லையில் உள்ள மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
உக்ரைன் நாட்டின் ராணுவத்திற்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இதனால் தொடர்ந்து ரஷ்யா மீது தனது தாக்குதலை நடத்தி வருகிறது உக்ரைன் ராணுவம். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அமெரிக்க நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை பயன்படுத்தி கொள்ள உக்ரைன் ராணுவத்துக்கு அனுமதி வழங்கியது.
இதனால் தொடர் ஏவுகணைகள் ரஷ்யா நாட்டின் மீது ஏவியது உக்ரைன். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா அதிபர் புதின் ரஷ்ய ராணுவத்தினர் போரில் அணு ஆயுதத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கினர். மேலும் இந்த போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் ரஷ்யா வடகொரியாவின் ராணுவ உதவியை கேட்டுள்ளது.
அந்த வகையில் 15000 ஆயிரம் வடகொரியா ராணுவ வீரர்கள் ரஷ்யா உக்ரைன் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது மேலும் உக்ரைன் நாட்டுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யா மீது உக்ரைன் போர் புரிகிறது என்றாலும் கூட அதன் பின்னணியில் அமெரிக்க இருக்கிறது என்பது தான் உண்மை.