Dindigul:பரளிபுதூர் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு ஒரு வருடமாக ஆசிரியர் நியமிக்கப்பட வில்லை.
தமிழகத்தில் பள்ளிக்கு மாணவர்கள் வராமல் இருப்பதை பார்த்து இருப்போம். ஆனால் ஒரு வருடமாக ஆசிரியர் வராமல் பள்ளிக்கூடம் செயல்பட்டு இருக்கிறது என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பரளிபுதூர் என்ற ஊரில் நடந்து இருக்கிறது. இந்த ஊரில் 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
அந்த ஊரில் உள்ள குழந்தைகள் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரளிபுதூரில் உள்ள அரசு பள்ளிக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படிக்க சென்று வந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் அந்த ஊரில் தொடக்க பள்ளி கட்ட மக்கள் கோரிக்கை வைத்து தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகம் 2023-ம் ஆண்டு டிசம்பரில் பரளிபுதூரில் ரூ.39 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கொண்ட தொடக்கப் பள்ளியை கட்டியது. ஆனால் இந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. அந்த ஊர் மக்களே பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஒரு வருடங்களாக குழந்தைகள் பள்ளிக்கு சென்று வெறுமனவே கல்வி பாடங்கள் எடுக்கப்படும் மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார்கள். எனவே மாணவர்கள் நலன் கருதி உடனடியாக அப் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.