Karnataka:கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக இருக்கும் நாகராஜ் துறவியாக மாறவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் இன்று பல லட்ச இளைஞர்களின் கனவாக அரசு வேலை இருக்கிறது. அரசு வேலை பெறுவதற்காக இளைஞர் போட்டிப்போட்டு தேர்வுகளுக்கு படித்து வருகிறார்கள். அது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்தநிலையில் கலெக்டராக பணிபுரியம் ஒருவர் அந்த அரசு வேலையை உதறிவிட்டு துறவறம் செல்லப்போவதாக அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிகழ்வு கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நடந்துள்ளது. துமகூரு மாவட்டத்தில் உள்ள ஒன்னஹிள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், நுண்கடன் துறையில் முனைவர் பட்டம் பயின்று இருக்கிறார்.இவர் விவசாய குடும்ப பின்னணியை சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதில் இருந்து ஆன்மிகம் மீது நாட்டம் கொண்டவராக இருக்கிறார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மண்டியா மாவட்டத்தில் கே.ஆர்.பேட்டை தாலுகாவில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் தான் நாகராஜ். இவர் தற்போது மாண்டியா மாவட்ட கூடுதல் ஆட்சியர் பதவியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மாதம் 2 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் அவர் துறவறம் செல்ல உள்ளதாக கூறி இருக்கிறார்.
இது குறித்து அவரிடம் கேட்கும் போது மனித வாழ்க்கை என்பது ஒரு குப்பை எனவும் அதைவிட்டுவிட்டு விலகுவதாக தெரிவித்தார். இது அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாகராஜ் பாலகங்காதர்நாத் சுவாமியிடம் சிறுவதில் கல்வி பயின்று இருப்பதே அவருக்கு ஆன்மிகத்தில் ஆர்வம் ஏற்படக் காரணம் என சொல்லப்படுகிறது.