GOLD PRICE:இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,130-க்கு விற்பனையாகி வருகிறது.
இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் பொருளாக தங்கம் இருக்கிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் தங்கம் நுகர்வோர் இருக்கிறார்கள். இந்தியாவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது.கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம் ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது.
அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது.அதற்கு காரணமாக அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில். நவம்பர் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது இருந்தது. இந்த நிலையில் நேற்று டிசம்பர்-3 ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து இருக்கிறது.
இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.7,130-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.320 ஆக உயர்ந்து இருக்கிறது. எனவே ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ. 57,040-க்கு விற்பனையாகி வருகிறது இந்த நிலையில் இன்று டிசம்பர்-4 தங்க விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. எனவே ஒரு கிராம் தங்கம் ரூ. 7,130-க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 57,040-க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கு, ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.