Hindi language controversy:நிர்மலா சீதாராமன் இந்தி மொழி குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
நேற்று மக்களவையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து அதில் வங்கிகள் திருத்த சட்ட மசோதா தொடர்பான கேள்விகளை எதிர்கட்சியினர் எழுப்பி இருந்தார்கள். அதற்கு பதிலாக இந்தி மொழியில் பேசி இருந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பேசிய இந்தியில் தவறுகள் இருக்கிறது என இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியினர் முன் வைத்தார்கள்.
அதற்கு பதிலாக தான் சிறுவயதில் இந்தி கற்க சென்ற போது தமிழகத்தில் உள்ளவர்கள் கேலி கிண்டல் செய்தார்கள். தமிழத்தில் பிறந்த உனக்கு இந்தி மொழி எதற்கு என கேட்டார்கள். மேலும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் தென் இந்தியாவில் இழிவாக பார்க்கப்பட்டது என கூறி இருந்தார். அங்கு அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் இருக்கிறது.
தான் இந்தி படிக்காததற்கு காரணமாக திமுக என குற்றச்சாட்டு வைத்தார். இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரகுபதி நாங்கள் இந்தி படிப்பதை திமுக அரசு ஒருபோதும் எதிர்க்க மாட்டோம், இந்தி திணிப்பை மட்டுமே எதிர்ப்போம் என பேசி இருந்தார்.
எனவே அவரை தொடர்ந்து எம்.பி திருச்சி சிவா திமுக எப்போதும் ஒரு மொழியை படிக்க எதிர்ப்பு தெரிவிக்காது. இந்தி மொழி ஆதிக்கத்தை எல்லாக் காலக்கட்டத்திலும் திமுக எதிர்க்கும் என பேசினார்.ஒரு மொழி மீது மற்ற மொழி ஆதிக்கம் செலுத்துவதை எப்போதும் எதிர்ப்போம் என்று நிர்மலா சீதாராமன் மக்களவையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.