VCK-TVK: ஒரே மேடையில் விஜய்யுடன் பங்கேற்காதது குறித்து திருமா அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
கடந்த ஒரு வருடங்களுக்கு முன் ஆதவ் அர்ஜுனா நிறுவனம் “அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்” எழுதி வந்தது. இந்த நூலை வெளியிட்டு விழாவில் விஜய், திருமா இருவரும் ஒரே மேடையில் பங்குபெற உள்ளார்கள் என்ற தகவல் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. விஜய் அரசியல் வருகை காரணமாக அவரது கட்சி அரசியல் எதிரியாக திமுகவை அறிவித்தார்.
இந்த நிலையில் தான் விஜய் உடன் ஒரே மேடையில் பங்கேற்கும் நிகழ்வினை புறக்கணித்து இருக்கிறார் திருமாவளவன். அவரது புறக்கணிப்புக்கு காரணம் திமுகதான் காரணம் என பேசப்பட்டது. மேலும் அக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திருமாவை புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைத்து இருந்தார். அதனையும் மறுத்து இருந்த திருமா அது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து இருக்கிறார்.
அதில், என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்த பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னரும் விஜயோடு எப்படி ஒன்றாக மேடையேற முடியும்..? மேலும், கொள்கை பகைவர்களின் சூது- சூழ்ச்சிக்கு பலியாகி, அவர்களின் நோக்கம் நிறைவேற இடமளித்து விடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடு இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
இன்று டிசம்பர்-6 சென்னையில் நடைபெற உள்ள புத்தக வெளியிட்டு விழாவில் அம்பேத்கர் புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அதனை பெற்றுக் கொள்ள இருக்கிறார்.