காசா மீது போர் தொடுக்க கூடாது!! இஸ்ரேலிய பிணைக்கைதிகளை கொன்று விடுவோம் ஹமாஸ் அச்சுறுத்தல்!!

0
158
Hamas Threatens to Kill 250 Israeli Hostages in Gaza War
Hamas Threatens to Kill 250 Israeli Hostages in Gaza War

Israel-Palestine: காசா மீது போர் தொடுத்தல்  250 இஸ்ரேலிய பிணைக்கைதியாக கொன்று விடுவோம் என ஹமாஸ் அமைப்பு அச்சுறுத்தி வருகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீன் போர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய போர் தாக்குதலில் சுமார் 44,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட இருக்கிறார்கள். இதனால், காஸாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து இஸ்ரேல் நாட்டின் மீது எதிர் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை இரு நாட்டினரும் போரை நிறுத்தாமல் இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் எல்லை கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் 250 பிணைக்கைதியாக பொது மக்களை காசாவுக்கு சிறைபிடித்து சென்று இருக்கிறார்கள் ஹமாஸ் அமைப்பினர். இதற்கு எதிர் தாக்குதலாக  இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் அதிகம் இருக்கும் காசா நகரின் மீது மனித உடல்களை வெப்பத்தால் ஆவியாக்கும் ஏவுகனைகளை தொடர்ந்து ஏவி வருகிறது. இந்த தாக்குதலில் 2210 பேர் உடல் வெப்பத்தால் ஆவியாகி விட்டது என  பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது.

மேலும்,இஸ்ரேஸ் பிணைக்கைதியாக மீட்க தாக்குதலை தீவிரப்படுத்தினால் அவர்களை கொன்று விடுவோம் என ஹமாஸின் ராணுவ பிரிவான இஸ் எல்-தீன் அல்-கஸ்ஸாம் படை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

Previous article‘புரோபா – 3’ செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!
Next articleதமிழக அரசே- அதானி குழும ஒப்பந்தத்தை  ரத்து செய்!! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!!