State of Haryana: விவசாயப் பேரணியை தடுக்க ஹரியான மாநிலத்தில் 11 கிராமங்களுக்கு இணைய சேவையை ரத்து செய்து இருக்கிறது அம்மாநில அரசு.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டி போராட்டம் நடத்தினார்கள். சுமார் ஒரு ஆண்டு காலமாக டிராக்டர்கள் மூலம் தலைநகர் டெல்லியை முற்றுகையிட வந்த போது எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தார்கள். ஒரு வருடகாலமாக நீடித்த இந்த விவசாயிகள் போராட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது அதன் பிறகுள் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
அதன் பிறகு மீண்டும் ஹரியான மாநில விவசாயிகள் பயிர் விலை நிர்ணயம் செய்ய போராட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் கிடைக்கப்பெற்ற வேண்டும் என்றும் பிற கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள். மேலும் விவசாயக் குழு டெல்லியை நோக்கி பேரணி நடத்தி இருக்கிறார்கள்.
அவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் பஞ்சாப் ஹரியானா மாநில எல்லைப்பகுதியான ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். முன்பு நடந்த விவசாய பேரணி இறுதியில் கலவரமாக மாறியது. அதுபோன்று எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க ஹரியான அம்பாலா மாவட்டத்தின் 11 கிராமங்களில் முற்றிலும் இணைய சேவையை முடக்கிய இருக்கிறது.
இந்த விவசாய பேரணி தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்புவது என அனைத்தும் முடங்கி இருக்கிறது. இந்த நிலைமை வருகிற 9 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.