இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

0
200
There is no change in gold price today. One gram of gold is selling at Rs 7,115
There is no change in gold price today. One gram of gold is selling at Rs 7,115

gold price: இன்று  தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.7,115-க்கு விற்பனையாகி வருகிறது.

இந்தியாவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது.கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது. அதற்கு காரணமாக அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில். நவம்பர் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கம்  ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது இருந்தது. டிசம்பர்-3 அன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து இருக்கிறது. அடுத்ததாக டிசம்பர்-4 தங்க விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. டிசம்பர்-5 ஆம் தேதி ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,140க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.57,120-க்கு விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில்  நேற்று டிசம்பர்-6 தங்கம் ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து இருக்கிறது. எனவே ஒரு கிராம் தங்கம் ரூ.7,115-க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்துக்கு  ரூ.200 ரூபாய் குறைந்து ரூ. 56,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று டிசம்பர்-7 தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.

அந்த வகையில்  ஒரு கிராம் தங்கம் ரூ.7,115-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 56,920-க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கு, ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சமாக  விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleஅடிலெய்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த காரணம்!!இந்திய அணி செய்யும் தவறுகள்!!
Next articleஇந்திய அணியை சிதறடித்த ஸ்டார்க்..திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள்!! இரண்டாவது போட்டியில் நடந்தது என்ன!!