dmk-pmk: அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டாலின் அறிவிப்பு.
வேளாண் நிலங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எந்த வித திட்டத்தையும் தமிழத்தில் செயல்படுத்த விடாமல் தடுப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதன் அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 ஏக்கர் பரபரளவில் அமைய இருந்த டாட்டா டைட்டானியம் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தியது.
அதை போலவே முதன் முதலின் டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். சுரங்கம் அமைக்க மக்கள் எதிர்ப்பு அதிகரிக்கவே இது வரை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஆதரவு தெரிவித்து வந்த திமுக தனது நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு பாமக ஆதரவு கொடுத்து இருக்கிறது. அப்போது, டங்க்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டாலின் அறிவிப்பு இருந்தார் இது முற்றிலும் முரணாக இருக்கிறது. போராட்டம் நடத்தி தான் இது போன்ற திட்டங்களை தடுக்க வேண்டுமானால் ஏன் கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.
மேலும், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் என்.எல்.சி நிறுவனத்துடன் கைகோர்த்து மக்கள் மீது அடக்குமுறைகளை நடத்தியது திமுக அரசு என அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.