கொரோனா வைரஸ் மனிதர்களை பார்க்கும் போது உடலில் உண்டாகும் நோய் எதிர்ப்பு உயிரினங்களை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பானது கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்து உருவாக்குவதில் மிகவும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சயின்ஸ் இம்யூனாலஜி என்கிற அறிவியல் இதழில் இதுகுறித்து வெளியான ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளின் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு அமைப்பு குறித்து அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வுக்காக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 10 நோயாளிகளின் உடலில் உள்ள வைரசுக்கு எதிராக போராடும் டி உயிரணுக்களை சோதனை செய்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத ஆரோக்கியமாக உள்ள 10 பேரில் 2 நபர்களின் ரத்தத்திலும் அத்தகைய டி – உயிரணுக்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதன் மூலமாக கோவிட் 19 வைரஸ் இனத்தை சேர்ந்ததும் சாதாரண சளி மற்றும் ஜுரத்தை ஏற்படுத்தும் வேறு ஒரு வகை வைரசுக்கு எதிராக அந்த நோய்க்கு உயிரணுக்கள் உருவாகி இருப்பதை கண்டறிந்தனர்.
இவர்கள் கண்டறிந்த இந்த இரண்டு வகையான டி – உயிர் அணுக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த 10 பேரின் இரத்தத்திலும் சிடி4+ வகை டி – உயிரணுக்கள் அதிகமாகி செயல்படுவது கண்டறியப்பட்டது. மேலும் இந்தப் 10 பேரில் 8 பேருக்கு சிடி8+ டி – உயிரணுக்கள் மிகுந்து உள்ளதை கண்டறிந்தனர்.
இதன் மூலமாக கொரனோ பாதிப்பால் உடலில் அதிகமாகும் நோயெதிர்ப்பு உயிரணுக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த உயிரணுக்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தீவிரமாக செயல்படுவதால் ஆரோக்கியமான உயிரணுக்கள் அளிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிப்பட்டுள்ளது.
தற்போது இந்த வகையான உயிரணுக்களை கண்டறிந்துள்ளது கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.