பால் பாக்கெட் கவர் நிறத்தை மாற்றி ஏமாற்றுவதா? ஆவின் நிறுவன மோசடி – அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

0
89
PMK Anbumani has been accused of cheating Green Magic Plus milk, which is newly introduced in Aavin's company
PMK Anbumani has been accused of cheating Green Magic Plus milk, which is newly introduced in Aavin's company

Anbumani: ஆவின் நிறுவனத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி அன்புமணி குற்றச்சாட்டு.

தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக அவர்களின் தேவைக்கு ஏற்ப லிட்டர் கணக்கில் பாக்கெட் பால் விற்பனை செய்து வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட்டில் புதிதாக ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டு புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்ய இருக்கிறது.

குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் வரும் டிசம்பர்-18 ஆம் தேதி முதல்  கிரீன் மேஜிக் என்ற பெயரில்  ஆவின் நிறுவனம் புதிய பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. இது குறித்து பாமக அன்புமணி தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ஆவின் நிறுவனம் சார்பில் புதிதாக வரும் பச்சை நிற பால் பாக்கெட்டில் புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்றும். பாலின் தன்மை குறித்து எந்தவித அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக  விட்டமின் ஏ, டி போன்றவைகள் சேர்க்கப்பட்டு இருக்கிறது என்ற தகவல் அந்த பால் பக்கெட்டில் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.

அதாவது, கிரீன் மேஜிக் பால் 500 மி.லி ரூ.22 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி பால் பக்கெட்கள்  ரூ.25 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பால் என்ற அளவில் விலையை பார்த்தல் ரூ.11 அதிகமாக விற்கப்பட உள்ளது என தெரிவித்து இருக்கிறார்.

Previous articleகுகேஷ் இளம் செஸ் சாம்பியன் அவருக்கு தமிழக அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!!
Next articleநடிகர் சிம்பு திரைப்படம் நடிக்க தடை !! உயர்நீதிமன்றம்  அதிரடி  உத்தரவு!!