இந்தியர்களை நாடு கடத்த டிரம்ப் முடிவு!! 18 ஆயிரம் பேர் கதி என்ன?

0
111
Trump's decision to deport illegal immigrants in the United States
Trump's decision to deport illegal immigrants in the United States

Trump: அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த  டிரம்ப் முடிவு.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில்  டொனால்டு டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட  கமலா ஹாரிஸை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தேர்தல் வாக்குறுதியாக அமெரிக்கர்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் மற்றும் வேலை வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப் போவதாக அறிவித்து இருந்தார்.

மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற்றம் செய்பவர்களுக்கு சட்டங்களை கடுமையாக்கப்படும் என்றும்  தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வருகிற ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அப்போது சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவை  விட்டு வெளியேற்ற முடிவு செய்து இருக்கிறார்.

அதற்கு அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE)சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற அடிப்படையில் எந்தவித ஆவணமும் இல்லாமல் இருக்கிறார்கள் என அறிந்து 15 லட்சம் பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதில்  சுமார் 18,000 இந்திய குடிமக்கள் எவ்வித ஆவணமும் இல்லாமல் இருக்கிறார்கள் என அறிவித்து இருக்கிறது.

அமெரிக்காவில் இருக்கும் , மெக்ஸிகோ மற்றும் எல் சால்வடாருக்கு இனத்தவருக்கு   அடுத்தப்படியாக  725,000 என்ற எண்ணிக்கையில் இந்தியர்கள் உள்ளார்களா என பியூ ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டு இருந்தது. அதன் பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது  அமெரிக்கா. அந்த வகையில் வாடகை விமானங்கள் மூலம் சட்டவிரோதமாக குடியேறிய  18,000 பேரை இந்தியாவிற்கு அனுப்ப உள்ளது.

Previous articleADMK : மீண்டும் பாஜகவுக்கு ஜான்ஸ் கொடுக்கும் எடப்பாடி.. அண்ணாமலை பதவிக்கு வந்த வேட்டு!!
Next articleகேப்டன்சி இல்லனா அவர் ஒன்னுமே இல்ல..விமர்சனத்தை வீசும் ரசிகர்கள்!! சோகத்தில் ரோஹித் சர்மா!!