bjp: கோவை குண்டு வெடிப்புக்கு காரணமாக இருப்பவரை தியாகி போல் சித்தரிப்பு பாஜக கண்டனம்.
கடந்த 1998 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை மாநகரில் 13 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த பயங்கரவாத செயலில் சுமார் 58 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தர்கள். இந்த குண்டுவெடிப்பு சதி திட்டத்தில் முதன்மை காரணமாக இருந்தவர் தடை செய்யப்பட “உம்மா பயங்கரவாத இயக்க” நிறுவனத் தலைவர் பாட்ஷா.
இவர் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 26 ஆண்டுகள் சிறை தண்டை பெற்று வருகிறார். இவர் நேற்று உயிரிழந்து இருக்கிறார். அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து நாம் தமிழர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்கள்.அதில் சீமான் அவர்கள் பாட்ஷாஅப்பா என்று குறிப்பிட்டு “தியாகி” போல் சித்தரித்து இருக்கிறார்.
அந்த வகையில் தான் விசிக வன்னியரசு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள் என கண்டனம் தெரிவித்து இருக்கிறது தமிழக பாஜக. மேலும், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள் அத்துமீறல்களை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்தினால் அவர்களை அடாவடியாக கைது செய்து இருக்கிறது திமுக அரசு.
ஆனால் 1983ஆம் ஆண்டு முதல் 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு என பல கொடூரமாக செயல்களில் ஈடுபட்ட பாஷா-வை தியாகி போல சித்தரித்து இருப்பவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை தெரிவித்து இருக்கிறார்கள். இது சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெற இது போன்ற செயல்களை திமுக செய்கிறது எனவும் கூறி இருக்கிறது.