kalaignarin kanavu illam : கலைஞர் கனவு இல்லத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்த ஆணை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தில் பொது மக்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கு குடிசை வீடுகளை புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவதற்காக தமிழக அரசு “கலைஞரின் கனவு இல்லம்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்து. இந்த திட்டத்தின்படி 2024-25-ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தமிழக அரசு சார்பில் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதாவது, இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவர்கள் நான்கு தவணைகளாக ஒரு வீட்டிற்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும். அதாவது, வீட்டின் பேஸ்மென்ட் மற்றும் சன்னல் வரை கட்டிட வேலை செய்த பிறகு , கான்கிரீட் மேல் தளம் , வீடு முழுமையாக கட்டி முடித்த பிறகு என தவணைகளாக தொகை பயனாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் .
மேலும், அரசு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கும் ஒப்பந்ததாரரிடம் கட்டுமானப் பொருட்களை வாங்குவது அவசியம். இந்த திட்டத்தின் கீழ் வீட்டின் பரப்பளவு 360 சதுர அடியாக இருக்க வேண்டும், இது வரை இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் தமிழகத்தில் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. எனவே வீட்டின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க அதற்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்து உள்ளது.
இந்த நிதியுடன் சேர்த்து மொத்தம் ரூ.1451.34 கோடி கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டிற்குள் அணைத்து வீடுகளை கட்டி முடிக்க தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது.