இன்று, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையாகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரமாக விலை உயர்ந்தது தங்க நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் சற்று விலை குறைந்து வந்த நிலையில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
அதன் பிறகு டிசம்பர்-13 ஆம் தேதி முதல் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. எனவே, டிசம்பர்-16 ஒரு சவரன் தங்கம் ரூ.57,120க்கு விற்பனையானது. மேலும், டிசம்பர்-17 ஒரு தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து உள்ளது. எனவே சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,200க்கு விற்பனையானது. நேற்று டிசம்பர்-18 தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து இருக்கிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.7,135-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து இருக்கிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,080 க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்து இருக்கிறது. அதாவது, ஒரு கிராமுக்கு ரூ.65 குறைந்து இருக்கிறது. இன்று டிசம்பர்-19 ஒரு கிராம் தங்கம் ரூ.7,070க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையாகிறது.
கடந்த மூன்று நாட்கள் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இன்று ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து இருக்கிறது. எனவே, ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்து இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.