Amit shah: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் பற்றி அவமதிப்பாக பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்ற கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது, அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் பற்றி பேசுகையில் “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது” என்றும், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இந்த அளவுக்கு கடவுளின் பெயரை பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம்” என பேசி இருந்தார்.
இது மிகப்பெரிய சர்ச்சைகள் எழுந்த நிலையில் பாஜக ஒருபோதும் “அம்பேத்கர்” அவர்களை அவமதித்து இல்லை என்ற கருத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அம்பேத்கர் குறித்த சர்ச்சைக்கு தான் தெரிவித்த கருத்துக்கள் “ஏ ஐ” வாயிலாக தவறுதலாக மாற்றி வருகிறார்கள் என அமித் ஷா கருத்துக்களை இணைய வலை தளத்தில் பதிவு செய்து வருகிறார். மேலும், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழகத்திலும் அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். முதல்லவர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விசிக திருமாவளவன், மதிமுக வைகோ, நாம் தமிழர் கட்சி சீமான், தவெக தலைவர் விஜய் என தமிழகத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் அம்பேத்கர் பற்றி அவமதிப்பாக பேசியதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வன்மையாகக் கண்டித்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.