gold price: இன்று, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,320-க்கு விற்பனையாகிறது.
இந்த வருட அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை சவரன் ரூ.59 ஆயிரமாக உச்சம் பெற்ற நிலையில் தங்க விலை இனி குறையப்போவதில்லை, இந்த ஆண்டு இறுதியில் 65 ஆயிரமாக தங்கம் விலை உயரும் என அறிவித்தார்கள். இச்செய்தி தங்கம் வாங்குபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன் பிறகு டிசம்பர்-13 ஆம் தேதி முதல் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. டிசம்பர்-18 அன்று தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.7,135-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,080 க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று, அதிரடியாக விலை குறைந்து இருக்கிறது.
அதாவது, ஒரு கிராமுக்கு ரூ.65 குறைந்து இருக்கிறது. இன்று டிசம்பர்-19 ஒரு கிராம் தங்கம் ரூ.7,070க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று டிசம்பர்-20 ஒரு கிராமுக்கு ரூ,30 குறைந்து இருக்கிறது. எனவே, ஒரு கிராம் தங்கம் ரூ.7,040க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,320 ஆக விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது. ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து உள்ளது. எனவே ஒரு கிராம் வெள்ளி ரூ.98 க்கு ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000க்கு விற்பனை வருகிறது.