ஜெயம் ரவி விவாகரத்து கேட்க அவர்தான் காரணம்!! உண்மையை போட்டுடைத்த  மனைவி.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

0
93
Actor Jayam Ravi and wife Aarti appeared in Chennai court for divorce
Actor Jayam Ravi and wife Aarti appeared in Chennai court for divorce

Jayam Ravi – Arthi: விவாகரத்து கேட்டு சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தி.

தமிழ் திரையுலகில்  நடிகர் தனுஷ் , இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் , ஜி.வி பிரகாஷ் போன்ற பிரபலமாக இருப்பவர்கள் அடுத்தடுத்து விவாகரத்து பெற்று வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தன் மனைவியான ஆர்த்தி உடன் சமரச விவாகரத்து பெற இருப்பதாக சமீப காலத்திற்கு முன் அறிவித்தார்.

மேலும், இதற்கு மறுப்பு தெரிவித்து ஆர்த்தி சென்னை குடும்பவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதி மன்றத்தில் நடைபெற்றது. அதற்காக நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். அப்போது என்னிடம் எந்த வகையில் கலந்து ஆலோசனை நடத்தாமல் ஜெயம் ரவி சமரச விவரத்தை தெரிவித்து இருக்கிறார்.

மேலும், விவாகரத்து வாங்குவதற்கு தற்போது அவர் காதலில் விழுந்து இருக்கிறார் என்று தெரிவித்து இருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இதற்கு முன்பாக ஆர்த்தி மற்றும் அவரது அம்மா தனது வங்கி கணக்கை பயன்படுத்தி வருகிறார் என்றும், தன்னுடைய இன்ஸ்டாகிராம்  கணக்கு ஆர்த்தியிடம் இருப்பதாக   அதை மீட்டு தர கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், சென்னை குடும்ப நீதிமன்றம் இருவரது மனுக்களையும் விசாரித்து அறிவுரை வழங்கி இருக்கிறது. அதாவது. ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரையும் மனம் விட்டு பேசும் படி கூறி இருக்கிறது. எனவே இருவரும் ஒரு மணி நேரம் தனிமையில் பேசி வருகிறார்கள். இவர்களது பேச்சு வார்த்தைக்கு பிறகு முடிவு வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது. இவ்விரு தம்பதிகள் விவாகரத்து பெற்றுக் கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Previous articleதொடர் விடுமுறை காரணமாக பலமடங்கு உயர்ந்த விமான கட்டணம்!!
Next articleஅடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!!