Nigeria : நைஜீரியா நாட்டில் 67 பேர் உணவு வாங்க முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருக்கிறார்கள்.
ஆபிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக நைஜீரியா இருக்கிறது. இந்த நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. அந்த நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினியால் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விழாக்கள் வருவதால் அன் நாட்டு மக்களுக்கு உணவு வழங்குவதற்காக கிறிஸ்தவ மதத்தினர் ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள்.
அப்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி இருக்கிறார்கள். மக்கள் உணவு வாங்கும் போது மிகப் பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த கூட்ட நெரிசல் சிக்கில் 67 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஜனாதிபதி போல டினுபு அரசு சார்பில் விசாரணை நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த விசாரணை முடிவில் பெரும் உண்மை வெளியானது, புதன்கிழமை தென்மேற்கு ஓயோ மாநிலத்தின் உணவு வழங்கிய போது கூட்ட நெரிசலில் 35 குழந்தைகள் உயிரிழந்து இருக்கிறார்கள். தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் சனிக்கிழமை அன்று நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது ஜனாதிபதி போலா டினுபு பேசி இருக்கிறார்.
அதில், நைஜீரியா தற்போது உணவு பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் உணவுக்காக பேசும் சிக்கலை சந்தித்து இருக்கிறார்கள். கூட்ட நெரிசலில் உயிரிழப்பு என்பது நைஜீரியாவில் சகஜமாக ஒன்று என்றும் அதை கட்டுப்படுத்த நினைத்தால் மக்களின் பசி அவர்களை தடுப்பதில்லை.