TN government: ஆதிதிராவிட சமூதாயத்தினருக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிட சமூதாயத்தினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர் மற்றும் தொழிலை விரிவு படுத்துவோருக்கு மானியக் கடன் வழங்க தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த வகையில் இந்தியாவில் முதன் முதலாக 2023-24 நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (ABCS)தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
எனவே, இந்த வருடமும் ஆதி திராவிட தொழில் முனைவோர் 1,303 பேருக்கு சுமார் 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்த திட்டத்தில் பயன் பெறுவோருக்கு தொழில் தொடங்க பயன்படும் தொகையில் 35% சதவீதம் மானியம் வழங்கப் படுகிறது. இந்த மானியம் வழங்க தேவைப்படும் தொகையின் அளவு சுமார் ரூ.1.5 கோடி உச்ச வரம்பு இருக்கிறது. மேலும், இந்த மானியத்தை பெறுவோரின் வயது வரம்பு 55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த மானியம் பெற தேவையான ஆவணங்கள் படிப்பு சான்றிதழ், குடும்ப அட்டை நகல், இருப்பிட சான்றிதழ் ,அடையாள அட்டை வாக்காளர் அட்டை வியாபாரம் நடத்துபவர் gst வரி செலுத்தும் ரசீது, சாதி சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களில் 2 நகல்கள் மற்றும் நோட்டரி பப்ளிக்கிடம் கையெழுத்து வாங்கிய உறுதிமொழி பத்திரம் ஆகியவை தேவைப்படும் ஆவணங்கள் ஆகும்.
இந்த திட்டத்திற்கு பதிவு செய்ய . https://msmeonline.tn.gov.in/aabcs/ என்கிற ஆன்லைன் தளத்தில் புதிய கணக்கை தொடங்கிய பின் மேற்கூறிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு அதிகாரிகள் ஆய்வு செய்த மானியம் வழங்குவார்கள் என அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.