gold price: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.5,7000க்கு விற்பனையாகி வருகிறது.
2024ஆம் ஆண்டு முடியும் நிலையில் மீண்டும் விலையேறத் தொடங்கி தங்கம் விலை. அதாவது இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.59 ஆயிரம் உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நவம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது.
இதற்கு காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல் தாக்கம் என்று கூறப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக ஏற்றம் கண்டது. இருப்பினும் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. அதாவது, டிசம்பர்-19 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், டிசம்பர்-20 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,320 ஆக விற்பனையாகி வந்த நிலையில் டிசம்பர் 21 விலை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.56,800க்கு விற்பனையானது. டிசம்பர் 24 தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,090-க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,720-க்கு விற்பனையானது. இந்த நிலையில், நேற்று டிசம்பர்-25 தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,100க்கும் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.56,800க்கும் விற்பனையானது.
இன்று, டிசம்பர் 26 கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,125க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,000க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து . ஒரு கிராம் வெள்ளி ரூ.100க்கு, ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சமாக விற்பனையாகிறது.