Russia: அமெரிக்க டாலருக்கு பதிலாக ரஷ்யா கரன்சி வர்த்தகம் பயன்படுத்தி வருகிறது.
அமெரிக்க மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பனிப்போர் நிலவி தொடர்ச்சியாக நிலவி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா உக்ரைன் போரில் உக்ரைன் நாட்டில் அனைத்து உதவிகளையும் செய்து வருவது அமெரிக்காதான், சிரியா உள் நாட்டுப் போரில் சிரியா அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா செயல்படுகிறது. அந்த நாட்டில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபடும் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க நேரடியாக உதவி செய்து வருகிறது.
அமெரிக்கா ரஷ்யா ஆகிய இரண்டு வல்லாதிக்க நாடுகளும் நேரடியாக மோதிக் கொள்ள முடியாமல் இது போன்ற போரில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ரஷ்யா அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு புதுவித நடவடிக்கையை கையில் எடுத்து இருக்கிறது.அதாவது, உலக நாடுகளுடன் வணிகத்தைத் ஒரு நாட்டின் பணத்தினால் செய்ய முடியும் என்றால் அது அமெரிக்க டாலர் தான்.
அதன் பயன்பாட்டை குறைக்க ரஷ்யா தனது நாட்டின் கரன்சி பயன்படுத்தி இருக்கிறது. அதற்காக காமன்வெல்த் நாடுகலான ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மோல்டாவியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் இருந்து பெட்ரோல் தயாரிக்க பயன்படும் கச்சா எண்ணெயை ரஷ்யா தன் நாட்டின் கரன்சியை பயன்படுத்தி வாங்கி இருக்கிறது.
அமெரிக்க டாலர் மதிப்புக்கு நிகராக தற்போது ரஷ்யா கரன்சி பணத்தை பயன்படுத்தி வருகிறது. இதனால் உலக அளவில் அந்த நாட்டின் கரன்சி மதிப்பு உயர்த்தப்படும்.