BJP Annamalai: மாணவி பாலியல் கொடுமை விவகாரம் திமுகவை எதிர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக அண்ணாமலை அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக வழக்கதில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளியாக கைதாகி இருக்கும் ஞானசேகரன் திமுக நிர்வாகியாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசு தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரிவர கடைபிடிக்கவில்லை.
குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது திமுக என எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும், பாஜகவினர் சென்னையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அக் கட்சியினர் மீது காவல்துறை கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை கண்டித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக அண்ணாமலை பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண் குறித்த விவரங்கள் அடங்கிய எப்ஐஆர் காப்பி சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
எப்ஐஆர் காப்பியை காவல்துறையினரால் மட்டுமே வெளியிட முடியும். பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை பாதுகாப்பது நம் கடமை இந்த விஷயத்தில் திமுக தலை குனிய வேண்டும். என தனது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். மேலும், திமுக வை தமிழக ஆட்சியில் இருந்து நீக்கும் வரையில் நான் காலில் செருப்பு போடா மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், நாளை காலை 10 மணியளவில் தனக்கு தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளதாகவும், நாளை முதல் 48 நாட்கள் திமுக அரசை அகற்ற வேண்டி முருகனுக்கு விரதம் இருக்க போவதாக கூறினார்.