dmk-bjp: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம், தமிழக அரசை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கதில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளியாக கைதாகி இருக்கும் ஞானசேகரன் திமுக கட்சியின் நிர்வாகியாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பாஜகவினர் சென்னையில் போராட்டம் நடத்தினார்கள் அப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து நேற்று தனது எதிர்ப்புகளை தெரிவித்தார் பாஜக அண்ணாமலை. மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
திமுக-வை தமிழக ஆட்சியில் இருந்து நீக்கும் வரையில் நான் காலில் செருப்பு போடா மாட்டேன் என்றும், நாளை காலை 10 மணியளவில் தனக்கு தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளதாகவும், 48 நாட்கள் திமுக அரசை அகற்ற வேண்டி முருகனுக்கு விரதம் இருக்க போவதாக ஆவேசமாக பேசினார்.
இந்த நிலையில் இன்று, அண்ணாமலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தனது வீட்டிற்கு வெளியே பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் முன் காலில் செருப்பு இல்லாமல், பச்சை நிற வேஷ்டி, முருகனுக்கு மாலை அணிந்து கொண்டு கையில் எடுத்து வந்த சாட்டை எடுத்து 6 முறை தன்னை தானே அடித்துக் கொண்டார். அப்போது, அங்கிருந்த கட்சியினர் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.