சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநாடு தேதி அறிவிப்பு!! குறைந்தது 10 லட்சம் பேரை கூட்ட வேண்டும் ராமதாஸ் அதிரடி!!

Photo of author

By Sakthi

சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநாடு தேதி அறிவிப்பு!! குறைந்தது 10 லட்சம் பேரை கூட்ட வேண்டும் ராமதாஸ் அதிரடி!!

Sakthi

PMK founder Ramadoss announced the date of the Vanniyar Sangh conference

pmk: வன்னியர் சங்க மாநாட்டு தேதியை அறிவித்தார் பாமக நிறுவனர்  ராமதாஸ்.

2025 ஆம் ஆண்டு புத்தாண்டு வரவேற்கும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்கூட்டம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி.மணி அவர்கள் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டார்கள்.

மேலும், நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர் உள் ஒதுக்கீடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், மேடையில் பேசிய ராமதாஸ் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என பேசினார்.

மேலும், பேசிய ராமதாஸ்வன்னியர் சங்க மாநில மாநாட்டு தேதியை அறிவித்தார். அதாவது வருகிற ஆண்டு 2025 மே-12ஆம் தேதி சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநில மாநாடு நடத்தப்படும் என பேசினார். இந்த மாநாடு அனைத்து சமுதாய முன்னேற்றத்திற்கான மாநாடாக அமையும் எனவும் , அனைத்து சமுதாயத்தினர் பங்கு பெற வேண்டும் என அறிவித்தார். இம் மாநாட்டில் குறைந்தது 10 லட்சம் பேர் கூட்ட வேண்டும் பேசி இருக்கிறார்.

வன்னியர் சங்க மாநாடு நடந்து 8 வருடங்கள் ஆகின்ற நிலையில் பாமக பெரிய அளவில் இதுவரை மாநாடு நடத்த வில்லை என்பதால் பாமக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் ராமதாஸ் அறிவிப்பு இருக்கிறது. மேலும், கடந்த காலங்களில் நடைபெற்ற மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநில மாநாடு இறுதியில் விசிக மற்றும் பாமகவிற்கு இடையேயான மோதலில் முடிந்தது.

அதன் காரணமாகவே வன்னியர் சங்க மாநாடு நடத்த பாமகவிற்கு காவல் துறையினர் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறார்கள்.  எனவே வருகின்ற ஆண்டு வன்னியர் சங்கம் மாநாடு நடத்த தமிழக அரசு மற்றும் காவல் துறையினர் அனுமதி வழங்குவார்களா என பாமக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்து இருக்கிறது.