வீட்டுக்கு பட்டா வாங்கதவர்கள் கவனத்திற்கு.. தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Janani

வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா வாங்குவதற்கு ஏதுவாக தமிழக அரசு ஒரு சிறப்பு முகாமை நடத்த ஏற்பாடு செய்து உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த முகாமை வருவாய் துறையுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 1961 ஆம் ஆண்டிலிருந்து மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருகிறது.

இவ்வாறு ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழு தொகையையும் செலுத்திய பிறகு நடைமுறையில் உள்ள வாரிய விதிகளின்படி விற்பனை பத்திரம் வழங்கி வருகிறது.இவ்வாறு விற்பனை பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு முதற்கட்டமாக சென்னை மாவட்டத்தில் வருவாய் துறை இடமிருந்து பட்டா பெறுவதற்கு ஏதுவாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

எனவே வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா பெறுவதற்கு ஏதுவாக விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்களை ஒப்படைத்து பட்டாவினை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்வது, வீடு வீடாகச் சென்று அங்கு வசிப்பவர்களிடமிருந்து உரிய ஆவணங்களை சேகரிப்பது, அனைத்து ஒதுக்கீடு தாரர்களுக்கும் கடிதம் அனுப்புவது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.