நமது வீட்டில் உள்ள எட்டு திக்குகளும் 8 லட்சுமிகளாக கருதப்படுகிறது.இந்த எட்டு லட்சுமிகளின் கரங்களே 16 செல்வங்கள் எனவும் கூறப்படுகிறது.
நமது வீட்டின் தலைவாசலில் கஜலட்சுமி இருப்பதாகவும், வீட்டின் சமையலறையில் தனலட்சுமி இருப்பதாகவும், சேமிப்பு அறையில் தானிய லட்சுமி இருப்பதாகவும், பூஜை அறையில் சந்தான லட்சுமி இருப்பதாகவும், தொழில் புரியும் இடங்களில் வீரலட்சுமி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த எட்டு லட்சுமிகளுள் மிகவும் முக்கியமானவர் கஜலட்சுமி ஆவார், இவர் சூரியனின் அம்சமாகவும் கூறப்படுகிறது. மேலும் மகாலட்சுமி என்பவர் வாசனையில் வசிக்க கூடியவர் எனவும் பூக்கள் பூக்காத செடிகளான வெற்றிலை, வல்லாரை போன்ற செடிகளில் வசிப்பவர் சரஸ்வதி என்றும் கூறுவர்.
வீட்டின் முன் பகுதியானது மூலிகைகளால் நிரப்பப்படக்கூடாது என்றும் கூறப்படுகிறது. அதாவது முருங்கை மரம் வாழைமரம் போன்ற மரங்கள் வீட்டின் முன்பு இருக்கக் கூடாது. பூக்களை பூக்காத செடிகளான கற்றாழை, மணி பிளான்ட், அரளிச்செடி மற்றும் கொடி வகைகளை சேர்ந்த மற்ற எந்த செடிகளையும் வீட்டின் முன்பு வைக்கக் கூடாது என்று கூறுகின்றனர். எனவே இந்த வகையான செடிகளை நமது வீட்டின் முன்பு வைக்கும் பொழுது நமது பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த செடிகள் அனைத்தும் நாம் பயன்படுத்தக்கூடிய வகையாக இருந்தாலும் கூட, அவைகளை நம் வீட்டின் பின்பக்கம் வைக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். அதேபோன்று துளசி செடியை வீட்டின் முற்றத்திலோ அல்லது வீட்டின் பின்புறமோ வைத்து வழிபட வேண்டும். அதாவது பூக்களை பூக்காத மற்றும் பூக்கள் பூத்தும் அவை வாசனை அற்று இருந்தாலோ அந்தச் செடிகள் வீட்டின் முன்பு வைக்கக்கூடாது எனவும், அந்த செடிகளை வீட்டின் பின்புறமாக வைக்க வேண்டும் எனவும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் வாசனை உள்ள செடிகளில் மட்டுமே மகாலட்சுமி குடியிருப்பாள் எனவும் அவ்வாறு வாசனை உள்ள பூக்களை பூக்கக்கூடிய செடிகள் நமது தலைவாசலில் இருந்தால் மட்டுமே மகாலட்சுமியின் வரவு நமது இல்லத்தில் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.