திருந்தாத ஜென்மங்கள்…. கோபத்தின் உச்சக்கட்டத்தில் அஜித் – “விடாமுயற்சி” நிலைமை!

Photo of author

By Hasini

அஜித் விடாமுயற்சி:

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக டாப் அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் ஒரு திரைப்படம் வருகிறது என்றாலே அவரது ரசிகர்கள் மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடுவார்கள்.

ajith vidaamuyarchi

அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஹாலிவுட் படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டிருக்கிறது .

அனிருத் இசை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் அஜித் உடன் திரிசா ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆரவ் மற்றும் அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகை ரெஜினா கேசன்ட்ரா கதாபாத்திரம் மிக முக்கியதாக படத்தில் பார்க்கப்படுகிறது .

விடாமுயற்சி எப்படி இருக்கு?

இந்த திரைப்படம் உலகம் முழுக்க இன்று பிரகப்பிரமாண்டமாக திரையரங்குகளில் ரிலீசாகி இருக்கிறது. இப்படத்தின் அதிகாலை காட்சியை பார்க்க ஆந்திர தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள் படம் குறித்து கருத்தை தெரிவித்தார்கள் .

அதில் ஒரு ரசிகர்…” எந்த ஒரு நடிகரும் முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள் அதன் பிறகு என்னுடைய படத்துக்கு வாருங்கள்” என்று கூறுவார்களா? நிச்சயம் கூற மாட்டார்கள். ஆனால் அஜித் கூறியிருக்கிறார்.

ajith 2

அதற்காகவே அவரை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக வேண்டியது இருந்தாலும் இப்போது வெளியாக இருப்பதும் எங்களுக்கு மகிழ்ச்சி தான் படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள் மாஸா இருக்கும் என கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகர் அஜித்தின் படம் தோல்வியோ வெற்றியோ அதெல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை. நாங்கள் அஜித்தை திரையில் பார்க்க வேண்டும் அவ்வளவு தான் என கூறியுள்ளார்.

ரசிகர்கள் அலப்பறை :

உடனே சில அஜித் ரசிகர்கள் ஒன்று கூடி அஜித்தின் பேனருக்கு மாலை அணிவித்து திருஷ்டி பூசணிக்காய் உடைத்து பாலபிஷேகம் செய்து “கடவுளே அஜித் உயிரே அஜித்தே என கோஷம் இட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது .

vidaamuyarchi 3

இதுபோன்று என்னை ஆரவாரம் செய்ய வேண்டாம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு கேட்டுக்கொண்டார். ஆனாலும் இந்த ரசிகர்கள் திருந்தின பாடே இல்லை. இதை அஜித் பார்த்தால் நிச்சயம் கோபத்தின் உச்ச கட்டத்திற்கு செல்வார் என நெட்டிசன் பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள் .

விடாமுயற்சி திரைப்படம் அஜித்திற்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட பிறகு வெளியாகுவதால் இந்தியா முழுக்க விடாமுயற்சி படத்தின் மீதான கவனம் அதிகரித்திருக்கிறது. அடுத்ததாக அஜித்தின் குட்பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்தடுத்து அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்ட நாட்களாகவே அமைந்ததுள்ளது.