ஒரு குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பந்தம் தொப்புள்கொடியில் இருந்து தான் உருவாகிறது. புனிதமான இடமாக கருதக்கூடியதும் இந்த தொப்புள்தான். ஒரு குழந்தை கருவில் இருக்கும் பொழுது அதற்கு தேவையான அனைத்தையும் தருவதும் அந்த தொப்புள் கொடி தான்.
தாய்க்கும் நமக்கும் உள்ள பந்தம் வெளியே வந்த உடனேயே அறுபட்டு விடுகிறது. ஒரு குழந்தையின் தொப்புள் கொடிக்கு உள்ளே இருக்கக்கூடிய அந்த ரத்தத்தோடு உறைந்து இருக்கக்கூடிய ஸ்டெம்செல்ஸ் மிகுந்த ஆற்றல் நிறைந்த ஒன்றாகும்.
பல பிரபலமான மருத்துவமனைகளிலும் கூட இந்த ஸ்டெம்செல்ஸ் ஐ பத்திரமாக எடுத்து வைத்து பிற்காலத்தில் அக்குழந்தைக்கு ஏதேனும் புற்றுநோய் போன்று ஏதேனும் ஏற்பட்டால் அதற்கான மருந்தை அந்த ஸ்டெம்செல்ஸ் இல் இருந்தே தயாரிக்கலாம் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது.
ஆனால் நமது முன்னோர்கள் குழந்தையின் தொப்புள் கொடி விழுந்த பின்னர் அதனை பொடியாக்கி ஒரு தாயத்தில் போட்டு குழந்தையின் கைகளிலோ அல்லது கால்களிலோ கட்டி விடுவார்கள்.
அவ்வாறும் குழந்தைகளுக்கு கட்டிவிடலாம் அப்படி இல்லை என்றால் தாய்மார்களும் கட்டிக் கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் அந்த தொப்புள் கொடியினை ஒரு உலர்ந்த துணியில் கட்டி பத்திரமாக நமது வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
குழந்தை பிறந்த இரண்டு வாரத்தில் தொப்புள் கொடியானது விழுந்து விடும். அப்பொழுது குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான அந்த பந்தமான தொப்புள் கொடியை ஒரு ஞாபகார்த்தமாக நமது வீட்டில் வைத்துக் கொள்ளலாம். பிற்காலத்தில் அதனை நமது குழந்தைகளிடமும் காட்டி அவர்களிடம் கொடுத்து விடலாம்.
முற்காலங்களில் குழந்தையின் தொப்புள் கொடியை தாயத்தாக மாற்றி இடுப்பில் கட்டி விடுவார்கள். அவ்வாறு கட்டிக் கொள்வதனால் அக்குழந்தைக்கு ஏதேனும் தீராத நோய் ஏற்பட்டு முடியாமல் இருந்தால் அக்குழந்தையின் இடுப்பில் உள்ள தொப்புள் கொடியினை எடுத்து பொடியாக்கி குழந்தைக்கு தரவிருக்கக்கூடிய மருந்தில் கலந்து கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்கும் பொழுது அக்குழந்தை தீராத நோயிலிருந்தும் விடுபட்டு நலன் பெறும்.
இன்றைக்கு விஞ்ஞானம் சொல்கின்ற அனைத்தையும் அன்றைக்கே நமது முன்னோர்கள் வாழ்க்கை முறையாக காட்டியுள்ளனர். எனவே நமது குழந்தையின் தொப்புள் கொடியினை ஒரு ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வது நல்லது.