கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ செய்யக்கூடிய யாகங்கள் என்பது மிக மிக சிறப்புக்கு உரியது. அப்படி நடக்கக்கூடிய யாகத்தில் நாணயங்களை சேர்ப்பது என்பது ஐதீகம். அவ்வாறு யாகம் முடிந்த பின்னர் அதன் சாம்பல் மற்றும் உள்ளே இருக்கக்கூடிய நாணயம் அனைத்தையும் நாம் எடுப்போம். யாகம் நடத்தினால் அதில் உள்ள சூடு தணிந்த பின்னரே யாகத்தில் உள்ள சாம்பல் மற்றும் நாணயத்தினை எடுக்க வேண்டும். சூடு தணியும் முன்னரே அதில் உள்ள பொருட்களை எடுக்கக் கூடாது. அதாவது காலை நேரத்தில் யாகம் நடத்தினால் அதன் சூடு தணிந்த பின்னர் மாலை நேரத்தில்தான் நாணயத்தினை எடுக்க வேண்டும்.
பொதுவாக ஒரு கோவிலின் கும்பாபிஷேகத்தின் போது யாகம் நடத்தப்படுகிறது. அந்த யாகம் நடத்தி முடித்த பின்னர் அங்கு வரும் மக்கள் அதன் சூடு தணியும் முன்னரே யாகத்தில் உள்ள சாம்பல் மற்றும் நாணயத்தினை எடுப்பார்கள். ஆனால் சூடு தணியும் முன்னரே அதில் உள்ள பொருட்களை எடுப்பது என்பது தவறான ஒரு செயலாகும்.
யாகம் என்பது அக்னி பகவான் நாம் கொடுக்கக்கூடிய பொருட்களை உணவாக எடுத்துக் கொள்வதே யாகத்தீ. அவ்வாறு அக்னி பகவானுக்கு உணவளிக்கும் போது அந்தத் தனல் முழுவதுமாக அணைந்தாலே அக்னி பகவான் தனது உணவை முழுவதுமாக ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம். அந்த தனல் இருக்கும்போதே அதாவது அக்னி பகவான் உணவை உண்டு கொண்டிருக்கும் பொழுதே அதில் உள்ள பொருட்களை எடுப்பது என்பது அவருக்கு நாம் அளிக்கக் கூடிய உணவினை மீண்டும் எடுப்பது போல் அர்த்தம். அவ்வாறு எடுப்பது பாவ செயலாகவும் மாறிவிடும்.
எனவே யாகத்தில் உள்ள தனலானது அணைந்த பின்னரே அதில் உள்ள நாணயத்தினை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கக்கூடிய நாணயத்தினை நாம் செல்வங்கள் வைக்கக்கூடிய இடத்தில் அதாவது பீரோ, கல்லாப்பெட்டி போன்றவைகளில் ஒரு மஞ்சள் துணியில் வைத்து அதனை வைக்க வேண்டும்.
எந்த இடத்தில் பணப்புழக்கம் வைத்திருக்கிறோமோ அந்த இடத்தில் இந்த நாணயத்தை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வைத்துக் கொள்ளலாம். மூன்று, நான்கு என நாணயங்களை நாம் எடுத்தால் அதனை யாரேனும் புதியதாக கடை துவங்குகிறார்கள் அல்லது தொழில் துவங்குகிறார்கள் என்றால் அவர்களிடம் கொடுக்கலாம்.
இவ்வாறு அந்த இடத்தில் நாணயத்தினை வைப்பதினால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக நிறைந்து இருப்பதாக அர்த்தம். நமது செல்வம் மென்மேலும் அதிகரிக்கவும் செய்யும்.